இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 தமிழக மீனவர்களுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!
Updated on
1 min read

சென்னை: நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 தமிழக மீனவர்களுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.  

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 262 விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்திருக்கிறார்கள். 

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 12 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் சென்ற படகை சேதப்படத்தியதோடு 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நீதிமன்றத் காவல் விதிக்கப்பட்டது. இதனைத் தொடந்து   அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com