காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம்: டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றச்சாட்டு

டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:07 pm IST

டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

அதிமுக துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில்,
சசிகலா வேண்டும், டிடிவி தினகரன் வேண்டாம் என்பதெல்லாம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம். சசிகலாவின் முடிவால் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு ஆட்சி காப்பாற்றப்பட்டது. 

அதிமுகவில் நிரந்தரமானவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய செயலாளர்கள்தான்.  ஊழல் ஆட்சி எனக் கூறிய ஓபிஎஸ் அணியுடன் ஈபிஎஸ் அணி சேரப் போகிறதா? எனக் கேள்வி எழுப்பிய அவர் பழனிசாமி தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.