அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு: ஓ. பன்னீர்செல்வம்
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அணிகள் இணைப்பு குறித்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் அதன்பிறகு அறிவிப்பு வெளியாகும் என்றும், சென்னை க்ரீன்வேஸில் உள்ள தனது இல்லத்தில் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அணிகள் இணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பன்னீர்செல்வம் இந்த பதிலை தெரிவித்தார்.
அதிமுக அணிகள் இணைப்புக்கு, ஓபிஎஸ் அணியினர் முன் வைத்த நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஓபிஎஸ் அணியினரின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை ஓபிஎஸ் அணியினர் முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...