எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

தொண்டர்களின் மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி: துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி!

தொண்டர்களின் மகிழ்ச்சிதான் என்னுடைய மனதிலும் நிறைந்து காணப்படுகிறது என்று துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:12 pm IST

சென்னை: தொண்டர்களின் மகிழ்ச்சிதான் என்னுடைய மனதிலும் நிறைந்து காணப்படுகிறது என்று துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பலகட்ட காத்திருப்புகளுக்குப் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இரு அணிகளின் இணைப்பு நிகழ்வானது, ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியஇருவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இருவரும் பேசிய பிறகு கட்சி பதவிகள் தொடர்பாகவும், தமிழக அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவருக்கு ஆளுநர் வித்யாசாகர்  ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பின்னர் தலைமைச் செயலகம் சென்ற அவர் துணை முதல்வராக அங்கு பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

முதலில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும், பின்னர் ஜெயலலிதாவும் அதிமுக என்னும் கட்சியினை   வளர்த்தெடுத்தனர். அப்படி சிறப்பு கொண்ட இந்த கட்சியில் உண்டான பிரச்சினைகள் தற்பொழுது களையப்பட்டு விட்டன. இதுவே ஒவ்வொரு அதிமுக தொண்டனின் விருப்பமும் மகிழ்ச்சியுமாகும்..

எனவே தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தற்பொழுது என்னுடைய மனதிலும் நிறைந்து காணப்படுகிறது.

இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.