உதயநிதி ஸ்டாலின் ஆபாசமாகப் பேசியது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் காவேரி பிரச்சனை குறித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசிய போது, முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை வந்த காவல்துறையினர், வழக்குகள் குறித்து விளக்கம் கொடுத்து விசாரணைக்காக அவரைக் கைது செய்து தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், உதயநிதி பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Marxist Communist Party State Secretary P. Shanmugam has stated that Udhayanidhi Stalin's use of obscene language is condemnable.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இது தவெக அரசின் துணிச்சலான நடவடிக்கை! முதல்வர் விஜய்யுடன் பேசியது பற்றி பெ. சண்முகம் பேட்டி
தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!
விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியது இப்போதுதான் புரிகிறது: பெ. சண்முகம்!

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK




