4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியது இப்போதுதான் புரிகிறது: பெ. சண்முகம்!

திமுகவால் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் விஜய் - சண்முகம் - மு.க. ஸ்டாலின்

Updated On :2 ஜூலை 2026, 12:13 pm IST

திமுகவால் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களின் மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் பேசுகையில், “நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத ஒரு புதிய அரசு அமைய வேண்டும் என்ற நோக்கில் தான் தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதனால்தான் கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சுமார் 1.75 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்.

குதிரை பேரம், கழுதை பேரம்: இத்தகைய சூழலில், அதிக சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெற்ற கட்சி என்ற முறையில் த.வெ.க. அரசு அமைப்பதற்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு என்ற முடிவை மேற்கொண்டோம். ஆனால், மக்கள் அளித்த இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்து, ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுகவினர் குதிரை பேரம், கழுதை பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்க முடியாமல், எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என முயற்சிக்கிறார்கள். விரைவாக தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் புரிகிறது. எம்.எல்.ஏ.க்களை கோடிக்கணக்கில் விலை பேசி இருக்கிற செய்தி வெளியானதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தானாக விரும்பி ஒரு கட்சியில் சேர்வது, மாறுவது தமிழ்நாட்டில் சகஜமான விஷயம். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசி வாங்குவது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆரோக்கியமற்ற அரசியல். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்துவிட்டு த.வெ.க-வில் சேர்ந்த போதே எங்களுடைய அதிருப்தியையும், இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது என்ற கருத்தையும் த.வெ.க தலைமையிடம் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளோம்.

திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பது போன்ற கருத்துகளை எங்களுக்கு முன்னால் வெளிப்படுத்தியபோது நாங்கள் அதை ஏற்கவில்லை. எங்களைப் போன்ற தோழமைக் கட்சிகள் ஏற்காத நிலையில், அவர்கள் இப்போது குறுக்கு வழிகளை முயற்சிக்கிறார்கள்.

சிங்கப்பெண் படை: தேர்தலில் திமுக அணியின் வெற்றிக்காக முழுமையாகப் பணியாற்றினோம். ஆனால் தேர்தல் முடிவு மாறிவிட்டது. இப்போதைக்கு நாங்கள் எந்த அணியிலும் இல்லை, இடதுசாரி அணி தனித்து நிற்கிறது. அரசுத் தரப்பில் பெண்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண் படை'யில் உள்ளவர்கள் அனைவரும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள்.

அவர்களுக்குப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களைக் கையாள்வது குறித்த பிரத்யேகப் பயிற்சிகள் தேவை என்பதை நேற்று முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். அதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், ஒப்பந்தம் மற்றும் வெளிமுகமை மூலமாகப் பணியாளர்களை நியமிக்கும் முறையை திமுக ஆட்சிக் காலத்திலேயே நாங்கள் எதிர்த்துப் போராடியுள்ளோம்.

தூய்மைப் பணி டெண்டர்: தூய்மைப் பணியைத் தனியாருக்கு ஒப்படைக்கும் டெண்டர் அறிவிப்புக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் அது திரும்பப் பெறப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் எப்படி இருக்கிறது என்பதை வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை வெளியான பிறகே முழுமையாகக் கணிக்க முடியும்.

மேகதாது அணை பிரச்சினை: மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. காவிரி போன்ற முக்கியப் பிரச்சினைகளில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாக அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதுதான் தமிழ்நாட்டின் மரபாக இருந்துள்ளது. ஆனால், இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த திட்டத்தை முதலமைச்சர் உடனே ஏற்றுக்கொண்டது எதிரும் புதிருமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசு தன் தரப்பு நியாயத்தை விளக்கி, ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்திற்கான தில்லி பிரதிநிதி நியமனம் என்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். அவர் சினிமா தயாரிப்பாளராக மட்டுமே வெளியே தெரிந்தவர், தகுதி பற்றி எனக்குத் தெரியாது. இதற்கு முன்பு கோவையைச் சேர்ந்தவர், ஏ.கே.எஸ்.விஜயன், ஜக்கையன் போன்ற பல பிரதிநிதிகள் இருந்திருக்கிறார்கள்.

தில்லி பிரதிநிதிகள் மூலம் இங்கு எந்தப் பிரச்னையும் தீர்க்கப்பட்டது கிடையாது. இது ஐஏஎஸ் அதிகாரிகளால் கையாளப்பட வேண்டியது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலிருந்தே கட்சிக்காரர்களுக்குப் பொறுப்பு தருவதற்காக ஏற்படுத்தப்பட்ட இடைக்கால ஏற்பாடுதான்.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்தப் பார்க்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் நடைமுறையில் உள்ளது. அதுவே தொடர வேண்டும். தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல லட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட வேண்டும்.

அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும் வெளிப்படையாக வைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதலாக வசூலித்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு முறைகேடுகளால் மாணவி கீர்த்தனா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகப்பெரிய துயரம். வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளால் தான் இந்த மரணங்கள் நிகழ்கின்றன. கியூட், நீட் போன்ற தேர்வுகளை முறையாக நடத்த பாஜக அரசு தவறிவிட்டது.

கனிமச் சுரங்கம்: இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதில் த.வெ.க, முதல்வர் உள்பட அனைத்துக் கட்சிகளும் உறுதியாக உள்ளோம். தற்காலிக நிவாரணமாக உள்ள 7.5% உள்ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்துவதற்கு வாய்ப்பிருந்தால் அதையும் வலியுறுத்துவோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிமச் சுரங்கத்திற்கான அனுமதியை மாநில அரசு நீட்டித்திருப்பது மிகத் தவறான நடவடிக்கை. கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இந்த அனுமதியை நீட்டித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு இந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது” என்றார்.

Summary

P. Shanmugam, State Secretary of the Communist Party of India (Marxist), has stated that the DMK is unable to accept being out of power and office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.