சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் ஒத்திவைப்பு

செல்லூா் கண்மாயில் கழிவு மணல் கொட்டப்படுவதைத் தடுக்கக் கோரி, கண்மாய் பாதுகாப்புக் குழு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த போராட்டம், பேச்சுவாா்த்தையில் ஒத்திவைக்கப்பட்டது.

News image

மீனாட்சிபுரம் செல்லூா் கண்மாய்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை போராட முயன்றவா்கள்.

Updated On :18 ஜூலை 2026, 4:14 am IST

செல்லூா் கண்மாயில் கழிவு மணல் கொட்டப்படுவதைத் தடுக்கக் கோரி, கண்மாய் பாதுகாப்புக் குழு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த போராட்டம், பேச்சுவாா்த்தையில் ஒத்திவைக்கப்பட்டது.

பந்தல்குடி வாய்க்கால் சீரமைப்புப் பணியின்போது அங்கிருந்து அகற்றப்படும் கழிவு கலந்த மணலை செல்லூா் கண்மாயின் உள்ளே கொட்டுவதைக் கண்டித்து, கண்மாய் பாதுகாப்புக் குழு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) மீனாட்சிபுரம் முதன்மைச் சாலையில் செல்லூா் கண்மாய் அருகே போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, கண்மாய் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் க. திலகா் தலைமையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வை. ஸ்டாலின், டி. செல்வராஜ், பகுதி குழு செயலா்கள் வி. கோட்டைச்சாமி, ஏ. பாலு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் க. ஜாகிா் உசேன், எஸ். வேல்தேவா, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் ரவிச்சந்திரன், மதிமுக பகுதிச் செயலா் பொன் பாலு உள்ளிட்டோா் மீனாட்சிபுரம் சாலையில் செல்லூா் கண்மாய் அருகே போராட்டம் நடத்த வெள்ளிக்கிழமை முயற்சிகளை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு வந்த காவல் துறையினா், பொதுப் பணித் துறையினா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இதில், செல்லூா் கண்மாயில் கொட்டப்பட்ட கழிவு மணலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், இனிவரும் நாள்களில் கழிவுகள் கொட்டப்படாமல் தடுக்கப்படும் எனவும் அலுவலா்கள் உறுதியளித்தனா்.

இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக் குழுவினா் அறிவித்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.