டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:42 pm

DIN

அதிமுக-வின் இரு அணிகளும் இன்று இணைந்தன. இதையடுத்து தமிழக அமைச்சரவைப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சராகப் பதவியேற்றார்.

மேலும், பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசகர் ராவ் முன்னிலையில் இவர்கள் பதவியேற்றனர்.

பின்னர் தலைமைச் செயலகம் சென்ற ஓ.பன்னீர்செல்வம் தனது இருக்கையில் அமர்ந்து பணிகளைத் துவங்கினார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற திரு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகம் இனி மாபெரும் வளர்ச்சியடையும் என்று நான் மிகவும் நம்புகிறேன். தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.