ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொறுப்பு ஆளுநரால் நடக்கும் அரசியல் சித்து விளையாட்டு: பொருமும் திவாகரன்!

தமிழகத்திற்கு என தனியாக ஆளுநர் இல்லாமல், பொறுப்பு ஆளுநரால் நிர்வகிக்கப்படுவதாலேயே இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுகள் நடக்கிறது என்று அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளரான... 

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:43 pm

DIN

மன்னார்குடி: தமிழகத்திற்கு என தனியாக ஆளுநர் இல்லாமல், பொறுப்பு ஆளுநரால் நிர்வகிக்கப்படுவதாலேயே இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுகள் நடக்கிறது என்று அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளரான சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளரான சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:

இந்த அரசை காப்பாற்ற வேண்டுமானால் சபாநாயகர் தனபாலை முதல்வராக நியமிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர்செல்வம் இல்லாத ஒரு அரசாங்கம் அமைவதுதான் இப்போது நல்லது  

நேற்று அமைச்சரவையிடம் முழுமையாக ஆலோசித்து ஒரு முடிவு எடுத்திருந்தால் இத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது.  

தமிழகத்திற்கு என தனியாக ஆளுநர் இல்லாமல், பொறுப்பு ஆளுநரால் நிர்வகிக்கப்படுவதாலேயே இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுகள் நடக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் டிடிவி தினகரனுக்கு மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.