சென்னை: மீனவர்கள் குடும்பங்கள் கண்ணீரில் காத்திருக்கும் பொழுது ஆர்.கே.நகர் தேர்தலில் வென்று மட்டும் என்ன செய்வீர்கள் என்று தமிழக அரசியல்வாதிகளை இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வங்கக் கடலில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் ‘ஒக்கி’ புயல் தாக்கியது. அப்பொழுது குமரி மாவட்டத்தில் முறையான புயல் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்படாத காரணத்தால், அதற்கு முன்பே மீன்பிடிக்கச் சென்றிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆழ்கடலில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் புயலின் வேகத்தில் பல்வேறு திசைகளில் அடித்துச் செல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் அவர்கள் கரை சேர்ந்துள்ளனர். ஆனால் இன்னும் பெரும்பாலனோர் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்..
இந்த விவகாரத்தில் கேரள அரசு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது. ஆனால் தமிழக அரசின் செயல்பாடுகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை. ஆனால் ஆளுங்கட்சியான அதிமுக நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல் தமிழக அரசியல்வாதிகள் பலரும் அங்குதான் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் இயக்குநர் ரஞ்சித் கடுமையான விமர்சனத்தினை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் தெரிவித்துள்ளதாவது:
இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? கடலுக்குள் சென்று வீடு திரும்பாத எண்ணற்ற சகோதரர்களை எதிர்பார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா? #ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்?
இவ்வாறு அவர் கடுமையாகத் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


