சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது முறையாக வருமானவரித்துறை புதன்கிழமை சோதனை நடத்தியது.
படப்பையில் உள்ள மிடாஸ் மற்றும் அதன் அருகில் உள்ள ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட 6 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.
முன்னதாக, சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர்.
ஒரே நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 200 இடங்களில் அதிரடியாக நடைபெற்ற இந்தச் சோதனைகளில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 1800 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில், 200-க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்தினர். இதில், ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் மற்றும் சசிகலா குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோரது இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


