திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் கூடுதல் தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையில் இருந்து பாசன வசதிக்காக டிசம்பர் 30- முதல் கூடுதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை
Updated on
1 min read

திருமூர்த்தி அணையில் இருந்து பாசன வசதிக்காக டிசம்பர் 30- முதல் கூடுதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பரப்புக்கு கூடுதலாக அரை சுற்றுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இதனையேற்று, திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பரப்புக்கு கூடுதலாக அரை சுற்றுக்கு மட்டும் டிசம்பர் 30 முதல் மொத்தம் 900 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com