பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: 2 இளைஞர்கள் சாவு

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 8:02 pm

DIN

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள தென்பாதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் ராஜ விக்னேஷ் (22). இவர் தஞ்சாவூரில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார். இவரது மோட்டார் சைக்கிள் திருச்சியில் உள்ள பழுதுபார்ப்பு கடையில் பழுதுபார்க்கப்பட்டது. இதை எடுத்து வருவதற்காக ராஜ விக்னேஷ் தனது நண்பரான சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வரும் சீர்காழி அருகேயுள்ள இனாம்குளத்தலப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் பாலமுருகனுடன் (22) திருச்சிக்கு புதன்கிழமை சென்றார். இருவரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு நள்ளிரவு 12.45 மணியளவில் தஞ்சாவூர் நோக்கி ஓட்டி வந்தனர்.
வல்லம் அருகே முன்னையம்பட்டி பிரிவு சாலை பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த ராஜவிக்னேஷ், பாலமுருகன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து வல்லம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.