யானை தாக்கி பெண் சாவு
வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட் 2-ஆவது டிவிஷனை சேர்ந்தவர்அழகம்மாள் (52). எஸ்டேட் தொழிலாளியான இவர் தேயிலை பறிக்கும் பணியில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டிருந்தார்


வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட் 2-ஆவது டிவிஷனை சேர்ந்தவர்அழகம்மாள் (52). எஸ்டேட் தொழிலாளியான இவர் தேயிலை பறிக்கும் பணியில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த யானை, தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்துள்ளது.
இதனைக் கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து அங்கிருந்து ஓடினர். இதில் அழகம்மாளால் ஓட முடியவில்லை. அப்போது அவரை யானை தாக்கி விட்டு வனப்பகுதிதியில் சென்று விட்டது.
பலத்த காயமடைந்த அழகம்மாளை தொழிலாளர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அழகம்மாள் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...