ஸ்ரீரங்கத்தில் இன்று பரமபத வாசல் திறப்பு: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பரமபத வாசல் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பரமபத வாசல் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெறுகிறது.
இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் திரண்டுள்ளனர்.
முன்னதாக பகல் பத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.
வைணவத் திருத்தலங்களில் நடைபெறக்கூடிய முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பகல் பத்து, இராப்பத்து என மொத்தம் 21 நாள்கள் நடைபெறும்.நிகழாண்டில் கடந்த 18-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது.
இதில், ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல்பத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
மோகினி அலங்கார தத்துவம்: தன்னை தரிசிக்க வருபவர்கள் மம மாயா துரத்யமா எனப்படும் தன்னுடைய மாயையைக் கடப்பது சவாலானது. அவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. இந்த மூன்றிலும் பெண்ணாசையை ஒழிப்பதுதான் மிகவும் கடினம். ஏன்னென்றால் ஒரு ஜீவன் சரீரம் எடுக்க ஆரம்பித்த காலம் முதலே பெண்ணாசை இருந்து வருகிறது.
நம்பெருமாள் பூண்டிருக்கும் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) மயங்கியதால் அசுரர்கள் அமிர்தத்தை இழக்க நேரிட்டது. ஆகையால், பக்தர்களும் (பக்தர்கள்) மாயையில் மயங்காமல் நம்பெருமாளை பின்தொடர்ந்து சென்றால் சொர்க்கவாசலை (பரமபதவாசல்) அடையலாம் என்ற கருத்தை கூறுவது தான் மோகினி அலங்காரத்தின் சிறப்பு. 
இத்தகைய முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், நம்பெருமாள் வருடத்தில் ஒருமுறை மட்டும் அணியும் ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். 
விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்துப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com