சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை காலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அச்சமயம் விமானம் ஒன்று தரையிறங்கிக்கொண்டிருந்தது. மேலும் சில விமானங்கள் பயண நேரத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தது. இதனால் விமானநிலையத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இன்டிகோ ஏர்லைன்ஸைச் சேர்ந்த அந்தப் பேருந்து அப்போதுதான் விமானப் பயணிகளை பத்திரமாக முனையத்துக்கு கொண்டு சேர்த்துவிட்டு, அடுத்த விமானத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள திரும்பிக்கொண்டிருந்தது.
அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தற்செயலாக அந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
இதனால் மேற்கொண்டு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலை காரணமாக விமான நிலையத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


