சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சென்னை மெரினா கடற்கரையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பின்னர் 23-ஆம் தேதி காலை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை வன்முறையை பிரயோகித்து கலைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பிறப்பித்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 12-ஆம் தேதி வரை அமலில் இருக்குமென்று அறிவிக்கபப்ட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதால் தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாகவும், ஆனால் சென்னை மாநகர் காவல் சட்டப் பிரிவு 41-ன் படி மக்கள் அனுமதியின்றி கூடுதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


