ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன்: பன்னீர்செல்வம் அதிரடி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை க்ரீம்ஸ்சாலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டியது மாநில அரசின் கடமை.
ஜெயலலிதா மரணம் குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
விசாரணை கமிஷன் நடத்தும் விசாரணையின் முடிவில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும் என்று கூறினார்.
மேலும், பொதுமக்களை சந்திக்க வீடு வீடாக, கிராமம் கிராமமாகச் செல்வேன். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற முறையில் தீபாவுக்கு மதிப்பளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...