மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு!

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.    

News image
Updated On :13 பிப்ரவரி 2017, 11:23 am

DIN

சென்னை: பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.    

போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 6-ஆம் தேதி அன்று பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரது இல்லத்தின் அருகே கூடியிருந்த தஷ்வந்த் என்ற இளைஞன்தான் இந்த கோரச் செயலில் ஈடுபட்டவன். முழுவதும் எரிந்த நிலையில் ஹாசினி உடல் கடந்த 8-ஆம் தேதி அன்று அனகாபுத்தூர்  அருகே கண்டெடுக்கப்பட்டது. விசாரணை முடிவில் தஷ்வந்த்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.     

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தலைமைச் செயலகம் வந்த முதல்வர் பன்னீர்செல்வம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டார்.   அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடாக  வழங்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

இவர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்படும். மேலும் இது போல குற்றம் இனி நிகழாதவாறு தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.