மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூட்டம்?

ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டிருந்தபடி பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2017, 1:47 pm

DIN

சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டிருந்தபடி பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் சில நாட்களாக நிலவி வந்த அரசியல் நிலையற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பதவியேற்றார்.

பதவியேற்ற 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை புதிய அரசு நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். 

இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டிருந்தபடி பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மறுநாள் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று அரசு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.