புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இந்த முடிவு செல்லுமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்: பன்னீர்செல்வம் பேட்டி!

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்றுள்ள வெற்றி செல்லுமா செல்லாதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று  முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2017, 10:28 am

DIN

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்றுள்ள வெற்றி செல்லுமா செல்லாதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று  முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை மற்றும் அமளிக்குப் பிறகு வாக்கெடுப்பி நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

இதன்பின்னர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

இன்று சபை கூடியதும் உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிக்க விருப்பமோ தங்கள் மனசாட்சிப்படி அவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று கேட்டுக் கொண்டோம்.

அத்துடன் இதனை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டோம்.

ஆனால் எவ்வளவோ எடுத்து  சொல்லியும்  சபாநாயகர் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை.

அத்துடன் ரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பிய திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக காயம் அடையும் படியாக வெளியேற்றப்பட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் அடைந்துள்ள இந்த வெற்றி செல்லுமா செல்லாதா என்பதை மக்கள் தீர்மானிப்பர்கள்

இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்குச் சென்று மக்களை சந்திக்க முடியாத நிலை வரும்.

ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு குடும்பத்தின் ஆட்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது.

அநீதிக்கு எதிரான இந்த தர்மயுத்தம் இன்னும் சிறிது காலம் தொடரும்.

இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.