பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஜெயலலிதா எழுதிய நாவல் 'ஒருத்திக்கே சொந்தம்' மறுபதிப்பு

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா எழுதிய 'ஒருத்திக்கே சொந்தம்' என்கிற முதல் நாவலை ஜனவரி மாதத்தின் 'குடும்ப நாவல்' இதழில் மறுபதிப்பு செய்துள்ளார்கள்.

News image
Updated On :3 ஜனவரி 2017, 10:10 am

DIN


சென்னை: தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா எழுதிய 'ஒருத்திக்கே சொந்தம்' என்கிற முதல் நாவலை ஜனவரி மாதத்தின் 'குடும்ப நாவல்' இதழில் மறுபதிப்பு செய்துள்ளார்கள்.

திரைப்பட நடிகையாக, பாடகியாக, அரசியல்வாதியாக இருந்த ஜெயலலிதாவுக்கு நாவல் ஆசிரியர், எழுத்தாளர் என்ற முகங்களும் உண்டு.

ஜெயலலிதாவின் முதல் நாவல் 'ஒருத்திக்கே சொந்தம்' 1980ம் ஆண்டு வெளியானது. இந்த நாவலை மாலைமதி பதிப்பகம் வெளியிட்டது. நாவல் எழுத வேண்டும் என்ற கனவை நனவாக்கியவர், ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரும், மறைந்த துக்ளக் ஆசிரியருமான சோ.

ஒரு நாயகனுக்கும், 2 நாயகிகளுக்கும் இடையிலான பாசக் கதைதான் 95 பக்கம் கொண்ட 'ஒருத்திக்கே சொந்தம்' நாவலின் கரு.

Story image

இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற பலரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் குடும்ப நாவல் இதழில் இது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.