சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன்: அதிமுக தொண்டர்களிடையே தீபா பேச்சு

தி.நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீடு முன்பு கூடிய அதிமுக தொண்டர்களிடையே பேசிய அவர், உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

News image
Updated On :6 ஜனவரி 2017, 6:49 am

DIN


சென்னை: தி.நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீடு முன்பு கூடிய அதிமுக தொண்டர்களிடையே பேசிய அவர், உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு மாதமான நிலையில், ஏராளமான அதிமுக தொண்டர்கள் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீடு முன் குவிந்தனர்.

அவர்களை மாடியில் இருந்து பார்த்து வணக்கம் தெரிவித்த தீபா, வெற்றிச் சின்னமான இரட்டை விரலைக் காட்டினார். அதற்கு அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.

பிறகு, எனது அரசியல் பயணத்தை யாரும் தடுக்க முடியாது. திட்டமிட்டபடி அரசியலுக்கு வருவன். தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும். விரைவில் உங்களுக்கு நான் நல்ல முடிவி அறிவிப்பேன். ஜெயலலிதா தொடங்கிய நல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

இதைக் கேட்ட தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு, அவர்களை பார்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்து நன்றியை தெரிவித்துக் கொண்டார் தீபா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.