பயிர்ச் சேதத்தைத் தடுக்க "யானை தாண்டா பள்ளம்'!

தருமபுரி மாவட்டம் மசக்கல் காப்புக்காட்டையொட்டிய வனப்பகுதியிலிருந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்ச் சேதத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க ரூ.30 லட்சத்தில் 5 கிமீ தொலைவுக்கு "யானை தாண்டா பள்ளம்
ஏரியூர் சாலையில் கோடிஅள்ளி நாற்றங்கால் பகுதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள யானை தாண்டா பள்ளத்தை அளந்து ஆய்வு செய்கிறார் மாவட்ட வன அலுவலர் க. திருமால். உடன், உதவி வனப் பாதுகாவலர் பிரியதர்ஷினி,  வனச் சரகர்
ஏரியூர் சாலையில் கோடிஅள்ளி நாற்றங்கால் பகுதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள யானை தாண்டா பள்ளத்தை அளந்து ஆய்வு செய்கிறார் மாவட்ட வன அலுவலர் க. திருமால். உடன், உதவி வனப் பாதுகாவலர் பிரியதர்ஷினி, வனச் சரகர்
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் மசக்கல் காப்புக்காட்டையொட்டிய வனப்பகுதியிலிருந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்ச் சேதத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க ரூ.30 லட்சத்தில் 5 கிமீ தொலைவுக்கு "யானை தாண்டா பள்ளம்' (Elephant Proof Trench) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 179 கிமீ தொலைவுக்கு இந்தப் பள்ளம் அமைக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அந்தப் பணியில் மசக்கல் காப்புக் காட்டுப் பணியும் ஒன்று.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லைச் சுற்றியுள்ள சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வந்து சென்று கொண்டிருக்கின்றன.
யானைகள் நடமாட்டத்தில் மிக முக்கியமாகக் கருதப்படும் பயிர்ச் சேதத்துக்கு மின் இணைப்புடன் கூடிய கம்பி வேலித் தடுப்புகள் அமைத்தல் தோல்வியடைந்த திட்டமாகவும், வன உயிரின ஆர்வலர்களின் எதிர்ப்புகளைச் சந்திக்கும் திட்டமாகவும் மாறிப்போனது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறு அகழிகளைப் போல மொத்தமுள்ள காப்புக் காட்டைச் சுற்றிலும் "யானை தாண்டா பள்ளம்' அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியே வருவதைக் குறைக்க சுமார் 179 கிமீ தொலைவுக்கான "யானை தாண்டா பள்ளம்' அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பென்னாகரம் வனச்சரகத்துக்கு உள்பட்ட மசக்கல் காப்புக்காட்டைச் சுற்றிலும் இந்தப் பள்ளம் அமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் மூலம் 5 கிமீ தொலைவுக்கான இப்பணிகளுக்காக வனத்துறையிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்கிறார் மாவட்ட வன அலுவலர் க. திருமால்.
2 மீட்டர் உயரத்தில் பள்ளத்தின் அடிப்பகுதியில் ஒரு மீட்டர் அகலமும், மேற்பகுதியில் 3 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்தப் பள்ளம் தோண்டப்
படுகிறது.
ஏரியூர் சாலையில் கோடிஅள்ளியிலுள்ள வனத்துறை நாற்றங்கால் அமைக்கப்படும் பகுதியிலிருந்து தொடங்கும் "யானை தாண்டா பள்ளம்' சிறு சிறு குன்றுகளையும் கடந்து 5 கிமீ தொலைவுக்குச் செல்கிறது.
இப்பள்ளத்தால் யானைகள் மட்டுமின்றி, காட்டுப் பன்றிகளும் வனப்பகுதியிலிருந்து வெளியே வர முடியாது. ஒவ்வொரு முறையும் பயிர்ச் சேதத்துக்கு அளிக்கும் இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும்போது, தற்போது இத்திட்டத்துக்காக மேற்கொள்ளப்படும் செலவை ஒரு முறை முதலீடாகக் கருதுகிறார்கள் வனத்துறையினர்.
கூடுதலாக இதுபோன்ற ஏற்பாடு வனப் பகுதி ஆக்கிரமிப்புகளையும் தடுக்கும் என்கின்றனர். அதற்காகத் தேவைப்பட்டால் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திலிருந்தும் கூட இப்பள்ளத்துக்கான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com