பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டத்தால் ஸ்தம்பித்தது மெரீனா கடற்கரை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக மெரீனா கடற்கரையே ஸ்தம்பித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:47 am

DIN


சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக மெரீனா கடற்கரையே ஸ்தம்பித்துள்ளது.

ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் ஆதரவு வலுத்து வருகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை சென்னை மெரினாவில் 2 ஆயிரம் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

நேற்று இரவு முழுவதும் நீடித்த இவர்களது போராட்டம், இன்று காலை முதல் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. மெரீனா கடற்கரை முழுவதும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.

ஏராளமான பிரமுகர்களும், திரையுலக கலைஞர்களும், சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்து, மாணவர்களின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவை நேரில் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர் ஷேவாக் உள்ளிட்டோரும், மாணவர்களின் இந்த அமைதிப் போராட்டத்துக்கு சமூக தளங்கள் வாயிலாக தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் நடத்தி வரும் இந்த அமைதிப் போராட்டம் உலக நாடுகளையே தமிழகத்தின் பால் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.