போராட்டக் களமாக மாறிய புதுச்சேரி: நிரம்பி வழிந்த ஏஎப்டி மைதானம்
ஜல்லிக்கட்டு விவகாரம் எதிரொலியாக புதுச்சேரி நகரம் போராட்டக் களமாக மாறியது. இதன் ஒரு பகுதியாக ஏஎப்டி மைதானத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள், மாணவ, மாணவியர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.










