சென்னை: சர்வதேச சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள 'கோகைன்' போதைப் பொருளை, 'அயன்' திரைப்பட பாணியில் மாத்திரை போன்று விழுங்கி கடத்திய தென் ஆப்பிரிக்க பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தென் ஆப்பிரிக்கவைச் சேந்தவர் பிரின்சஸ் நோம்பிபிதி சோமி (47). இவர் பிரேசிலின் தலைநகரான சா பாலோ நகரில் இருந்து அபுதாபி வழியாக நேற்று இரவு சென்னைக்கு வந்தார். சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருந்த அவர் போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை மறித்து சோதனை நடத்தினர்.பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் கோகைன் என்னும் போதைப் பொருளை 'கேப்ஸ்யூல்களாக' மாற்றி விழுங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் உரிய முறையில் அந்த கேப்ஸ்யூல்கள் வெளியே எடுக்கப்பட்டன.
மொத்தம் 1.075 கிலோ எடையுள்ள இந்த போதை பொருளை 82 'கேப்ஸ்யூல்களாக' மாற்றி அவர் விழுங்கியிருந்தார். சர்வதேச சந்தையில் இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி ஆகும். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அந்தப் பெண் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


