டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு: சென்னைக்கு மழை எப்போது? பதில் உள்ளே

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:20 pm

DIN


சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆங்காங்கே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் இன்று காலை பதிவிட்டிருப்பதாவது, தமிழகத்தில் இன்றைய வானிலை இதமாக இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிசயமாக மழை பொழியப் போகிறது. சிவகங்கை மாவட்டம் கடந்த மாதத்தை போலவே மழையால் நனையப் போகிறது.

இன்றைய வானிலைப் படி தென் மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மழை பரவலாம்.

சென்னையை பொறுத்த வரையில் வருகின்ற ஜூலை 6-8 தேதிகளில் மழையை எதிர் பார்க்கலாம். இதில் ஏதாவது ஒரு நாளில் நல்ல மழையை எதிர் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.