தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை
டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.


சென்னை: டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்து வங்கியில் இருந்து முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவும், எழும்பூர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்கவும் கோரி தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமைன்ற நீதிபதி, அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.
20 ஆண்டுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டாகத்தான் வழக்கை விசாரிக்க அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இத்தனை நாளாக விசாரணை நடைபெறாமல் தற்போது வழக்கை விசாரிக்க தீவிரம் காட்டுவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமலாக்கத் துறை சார்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...