டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழர்களின் கலாசாரம், உடை பிடித்துள்ளது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்

தமிழர்களின் கலாசாரம், உடை பிடித்துள்ளது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:27 pm

DIN

தமிழர்களின் கலாசாரம், உடை பிடித்துள்ளது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்தார்.
விளாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: இந்தியாவில் எனக்கு பிடித்த பகுதியாக தமிழகம் உள்ளது. தமிழர்களின் கலாசாரம், உடை உள்ளிட்டவைகள் எனக்கு பிடித்துள்ளன. நான் கடந்த முறை வந்தபோது இருந்ததை விட தற்போது தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் இளைஞர் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.
மாணவர்கள் படிப்போடு விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். விளையாட்டுத் துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது. திறமைகளை வளர்த்துக் கொண்டு விளையாட்டுத் துறையின் மூலமாகவும் மாணவர்கள் சாதிக்கலாம் என்றார். முன்னதாக, கல்லூரியின் புதிய உடற்கல்வி கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் கல்லூரி மைதானத்தில் மாணவர்களுடன் சிறிது நேரம் அவர் கிரிக்கெட் விளையாடினார். பின்பு நடைபெற்ற மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.