மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கூட்டத்தொடரின் இறுதி நாளில் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் 'ஜாக்பாட்  ட்ரீட்': ஊதியம் இரு மடங்காக உயர்வு! 

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:28 pm

DIN

சென்னை: தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.

நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வாசித்தார்.அதில் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் தற்போதுள்ள ரூ.55 ஆயிரத்திலிருந்து, இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.

அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியானது தற்போதுள்ள ரூ.2 கோடியிலிருந்து ரூ 2.5 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

மேலும் தற்பொழுது ஓய்வு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கபப்டும் ஓய்வூதியமானது ரூ 12 ஆயிரத்திலிருந்து ரூ 20 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.

இந்த ஊதிய உயர்வானது ஜூலை ஒன்றாம் தேதி முதல்நடைமுறைக்கு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.