சென்னை மாநகரப் பேருந்து போலி பயணச்சீட்டு வழங்கிய 5 பேர் கைது

சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்ய போலியான மாதாந்திரப் பயணச்சீட்டு வழங்கிய 5 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகரப் பேருந்து போலி பயணச்சீட்டு வழங்கிய 5 பேர் கைது

சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்ய சிறப்பு பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில், தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர பயணச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

இதன்மூலம், மாநகரப் பேருந்தில் அதிகளவிலும், வாடிக்கையாகவும் பயணம் செய்யும் பயணிகள் இதனை உபயோகப்படுத்தி வருகின்றனர். சாதாரண, விரைவு, சொகுசு மற்றும் இரவுப் பேருந்து சேவைகளை இதில் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

இந்நிலையில், பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த பயணச்சீட்டில் போலிகள் உலவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகரப் பேருந்து தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதையடுத்து, போலியான மாதாந்திரப் பயணச்சீட்டு வழங்கிய 5 பேர் கண்டறியப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். 

இதில், மாநகரப் போக்குவரத்துத் துறையில் பயணியாற்றி வருபவர்கள் உட்பட கிருஷ்ணகுமார், ஜகதீஷ், சுரேஷ், பிரகாஷ் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ் பாபு உள்ளிட்ட 5 பேரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போலியான பேருந்து பயணச்சீட்டு தயாரித்து விநியோகித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com