வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆக., 5ல் அதிமுக அலுவலகத்துக்கு வாருங்கள்: நிர்வாகிகளுக்கு தினகரன் திடீர் அழைப்பு

ஆகஸ்ட் 5ம் தேதி அதிமுக அலுவலகத்துக்கு வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

News image
Updated On :31 ஜூலை 2017, 6:05 am

DIN


சென்னை: ஆகஸ்ட் 5ம் தேதி அதிமுக அலுவலகத்துக்கு வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், ஆகஸ்ட் 5ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, இரண்டாகப் பிரிந்த அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர இரண்டு மாத கால அவகாசம் வழங்கியிருந்தார் டிடிவி தினகரன். அவர் அளித்திருந்த கால அவகாசம் ஆகஸ்ட் 4ம் தேதியுடன் முடிவடைவதால், ஆகஸ்ட் 5ம் தேதி கட்சி அதிகாரத்தை முழுமையாக தன் கையில் எடுத்துக் கொள்ளும் வகையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் டிடிவி தினகரன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.