ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தி.நகரில் தயார் நிலையில் மருத்துவ நிபுணர்கள், ஆம்புலன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து தற்போது கரும்புகை வெளியேறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

News image
Updated On :1 ஜூன் 2017, 5:44 am

DIN


சென்னை: தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து தற்போது கரும்புகை வெளியேறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கட்டத்தில் இருந்து தற்போது கரும்புகை வெளியேறவில்லை. எனினும் முன்னதாக தீ விபத்தால் வெளியேறிய புகைக் காரணமாக மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராய மருத்துவ நிபுணர்கள் இப்பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துத் துறை நிபுணர்களும் இங்கே வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வெளியேறிய கரும்புகையினால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க  24 மணி நேரமும் கண்காணிப்புக் குழுவினரும், மருத்துவக் குழுவினரும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் இங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை முழுக் கட்டுக்குள் இருக்கிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.