ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னை சில்க்ஸில் 2-வது நாளாக தீ கொழுந்து விட்டு எரிவதால் பதற்றம்

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையின் முன் பகுதியில் இன்று காலை முதல் தீ மீண்டும் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

News image
Updated On :1 ஜூன் 2017, 4:53 am

DIN

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையின் முன் பகுதியில் இன்று காலை முதல் தீ மீண்டும் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸ் கட்டத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று முழுவதும் தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டத்தின் வலது புறத்தில் ஒரு பகுதியில் முதல் இரண்டு தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதுவரை லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டாலும் கூட தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலையில் உள்ளது.

இதன் காரணமாக, தியாகராய நகர் பகுதிகளில் இருக்கக்கூடிய உஸ்மான் சாலை முழுவதுமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கட்டடமானது ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விரிசல் காரணமாக எந்த நேரத்திலும் கட்டடம் இடிந்து விழுவதற்கான சூழல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த பகுதியில் சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் அவர் கூறுகையில்,
ஆய்வுக்குப் பின் இடிந்து விழுந்து கட்டடத்திற்கு அருகே உள்ள கட்டடங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இடிந்த நிலையில் உள்ள மீதி கட்டடத்தை இடிப்பது குறித்து பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.