தி.நகரில் தயார் நிலையில் மருத்துவ நிபுணர்கள், ஆம்புலன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து தற்போது கரும்புகை வெளியேறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


சென்னை: தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து தற்போது கரும்புகை வெளியேறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கட்டத்தில் இருந்து தற்போது கரும்புகை வெளியேறவில்லை. எனினும் முன்னதாக தீ விபத்தால் வெளியேறிய புகைக் காரணமாக மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராய மருத்துவ நிபுணர்கள் இப்பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துத் துறை நிபுணர்களும் இங்கே வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வெளியேறிய கரும்புகையினால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 24 மணி நேரமும் கண்காணிப்புக் குழுவினரும், மருத்துவக் குழுவினரும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் இங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை முழுக் கட்டுக்குள் இருக்கிறது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...