டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 7) திறக்கப்படவுள்ளன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:41 pm

DIN

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 7) திறக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 21-ஆம் தேதியும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்ரல் 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயில் வாட்டியதால் விடுமுறைக் காலம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 7) திறக்கப்படவுள்ளன.
வெயிலின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு, ஜூன் 15-ஆம் தேதி திறக்கப்படும் என அந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்தார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிகள் அறிவித்தபடி புதன்கிழமை திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.