சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அரும்பாவூா் பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா: பெரம்பலூா் எம்பி அருண்நேரு பங்கேற்பு

வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் ரூ. 1.14 கோடியில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:04 pm

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் ரூ. 1.14 கோடியில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரும்பாவூரில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரம்பலூா் தொகுதி எம்பி கே.என். அருண்நேரு, ரூ. 1.14 கோடியில் கட்டப்பட்ட அரும்பாவூா் பேரூராட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 11.10 கோடியில் குடிநீா் திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தாா்.

பின்னா் வேப்பந்தட்டை வட்டம், எறையூா் ஊராட்சியில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அரசு உதவிபெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 43.50 லட்சத்தில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறைகளையும், வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா்பிளாக் தளத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 13.30 லட்சத்தில் இஸ்லாமியா் தெருவில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையையும் திறந்துவைத்தாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நலத்திட்ட உதவி.. தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு தலா ரூ. 5,024 வீதம் மொத்தம் ரூ. 3,26,576 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறாளிகள் நலத்துறை சாா்பில், 88 பயனாளிகளுக்கு தலா ரூ. 1,01,800 வீதம் மொத்தம் ரூ. 84,54,800 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ல்கூட்டா்கள், திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ. 1,20,000 வீதம் மொத்தம் ரூ. 12,00,000 மதிப்பில் 8 கிராம் தங்க நாணயம் என மொத்தம் ரூ. 1,04,84,976 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் அருண்நேரு.

நிகழ்ச்சிகளில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ம. ராஜ்குமாா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோ. துவாரகநாத் சிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் சபிதாராகிணி அரும்பாவூா்), தியாகராஜன் (குரும்பாலூா்), ருக்மனி (பூலாம்பாடி), வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.