சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் குழுக்களிடையே அடிதடி, மோதல்!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், இன்று காலை அக்கட்சியின் மகளிர் அணி மற்றும் இதர குழுக்களிடையே நிகழ்ந்த மோதலில், சத்தியமூர்த்தி பவன் போர்க்களமானது.

News image
Updated On :7 ஜூன் 2017, 8:39 am

DIN

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், இன்று காலை அக்கட்சியின் மகளிர் அணி மற்றும் இதர குழுக்களிடையே நிகழ்ந்த மோதலில், சத்தியமூர்த்தி பவன் போர்க்களமானது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், இன்று காலை அக்கட்சியின் மகளிர் அணியான மஹிளா காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மஹிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மகளிர் அணியில்  பதவிகளை ஒதுக்குவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசாரிடம் அளிப்பதற்காக அவர்கள் முயன்றனர்.அப்பொழுது காங்கிரசின் பிற அணி நிர்வாகிகள்,அவர்களை மனு கொடுக்க விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியே ப்ளக்ஸ் போர்டுகளை வைத்தது தொடர்பாகவும் தகராறு துவங்கியது.   

இதனால் மகளிர் அணி மற்றும் இதர குழுக்களிடையே வாக்குவாதம் தொடங்கியது. பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். ஆபாச வசவுகளும் அரங்கேறின.சிறிது நேரத்தில் இந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தகராறில் ஈடுபட்ட  இரண்டு குழுக்களிடமும் விசாரிக்க உள்ளதாகவும், கட்சிக்கு அவப்பெயர் வரும்படி தவறை செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.