மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

நெய்வேலியில் தெர்மல் பவர் திட்டப் பணியின் போது விபத்து: 13 பேர் காயம்

நெய்வேலியில் தெர்மல் பவர் திட்டப் பணியின் போது ஆக்ஸிலரி பம்ப் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On :10 ஜூன் 2017, 10:45 am IST

நெய்வேலி: நெய்வேலி நியூ தெர்மல் பவர் திட்டப் பணியின் போது ரூபிங் சென்டர் முட்டு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தனியார் நிறுவனத்தின் மூலம் நியூ தெர்மல் பவர் திட்டப் பணியின் மூலம் சாம்பல் வெளியேற்றும் நிலையம் 40X14 மீட்டர் அளவில் 10 மீட்டர் உயரத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 11 மணியளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 13 பேர் தரைத்தளத்தில் ஜல்லி போடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பணி நிறைவுபெறும் நிலையில் இருந்தபோது இன்று அதிகாலை 6.30 மணியளவில் திடீரென ரூபிங் சென்டர் முட்டு சரிந்து விழுந்தது. இதில், சுமார் 15 அடி உயர்த்தில் பணியில் இருந்த 13 தொழிலாளர்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த வடமாநில தொழிலாளர்கள் 8 பேர் என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை முடிந்து அவர்களின் வசிப்பிடத்திற்கு திரும்பி உள்ளனர்.

பலத்த காயமடைந்த தங்கமணி, பழனிசாமி, பிரமோத்குமார் உள்ளிட்ட 3 பேரும் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் மட்டும் காயமின்றி அதிரிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.