ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல்

தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக பேரவை உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு கைது

News image
Updated On :14 ஜூன் 2017, 7:59 am

DIN

சென்னை: தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக பேரவை உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அதிமுக பேரவை உறுப்பினர் சரவணனின் வீடியோ பேச்சு தனியார் தொலைக்காட்சியில் வெளியானது இது குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதிக்க அளிக்க மறுத்து விட்டார். இதையடுத்து தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தி கூச்சல்குழப்பத்தில் ஈடுப்பட்டனர்.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், குமார் ஆகியோரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

பின்னர் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மோசடி செய்தது நியாயமா?, தமிழக அரசை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இவர்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் முஸ்லிம்லீக் கட்சி எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்று ஒசூர் நகர திமுகவினர், ஓசூர் பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியல் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுகவின் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.