பண பேரம்: விவாதிக்க அனுமதிக்காதது ஏன்?: பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்
பண பேரம் தொடர்பாக வெளியான விடியோ குறித்து விவாதிக்க அனுமதிக்காதது ஏன் என்று சட்டப்பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் அளித்தார்.


பண பேரம் தொடர்பாக வெளியான விடியோ குறித்து விவாதிக்க அனுமதிக்காதது ஏன் என்று சட்டப்பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் அளித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எம்.எல்.ஏ.க்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ குறித்து விவாதிக்க அனுமதி கிடைக்காததைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு பேரவைத் தலைவர் தனபால் அளித்த விளக்கம்: எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்துப் பேசுகின்றனர்.
சட்டப்பேரவையின் பழைய பதிவுகள்: 1972, 1985, 1996-ஆம் ஆண்டுகளில் அப்போது சட்டப்பேரவைத் தலைவர்களாக இருந்தவர்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு பேரவையில் பேசக் கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளனர். 1997-ஆம் ஆண்டு பத்திரிகைகளில் வந்த ஒரு படத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸ் உறுப்பினர் சி.ஞானசேகரன் அதிர்ச்சி தெரிவித்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் பத்திரிகைகளில் வந்துள்ள புகைப்படம் ஒரு புதிய திருப்பமாக அமைந்துள்ளது என்றெல்லாம் கூறினார். ஆனால், அந்தப் படம் உண்மைக்கு மாறானது எனப் பிறகு தெரிய வந்தது.
2010-ஆம் ஆண்டு பேரவை முன்னவராக க.அன்பழகன் இருந்தபோது, ஒரு செய்தி தன்னுடைய காதுக்கு வந்தால்கூட அது ஒரு குற்றச்சாட்டாக வடிவம் எடுக்கிறதென்றால், அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிô என்று கேட்டு அறிந்த பின்னர்தான் இந்த அவையிலே சொல்ல வேண்டும். 2011-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது, பத்திரிகையில் வரக்கூடிய செய்திகளை எல்லாம் வைத்துப் பேசுவது முறையில்லை என்றார்.
1998-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, பத்திரிகைகளில் வரும் ஹேஷியங்களை வைத்து நாம் இங்கே விவாதம் செய்வது அழகல்ல என்று தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் பேசுவது சரியாக இருக்காது. நீதிமன்றதிலும் வழக்கு உள்ளதால்தான் விவாதிக்க அனுமதி தர மறுக்கிறேன். பேரவைத் தலைவரின் தீர்ப்பு குறித்து யாரும் விமர்சிக்க முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...