

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 'நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான விடியோ குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்' என்று கோரினார். ஆனால் இதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார்.
பேரவைத் தலைவரின் இந்த முடிவுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின்,
விடியோ விவகாரம் குறித்து முறையிட ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளோம். பல கோடி பேரம் பேசப்பட்டது சட்டப்பேரவைக்கு அவமானம். சரவணன் விடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பேரம் தொடர்பாக சரவணன் எம்எல்ஏ பேசியது பற்றி விவாதிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார். நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து எம்எல்ஏக்கள் பேசலாம். தீர்ப்பு, நீதிமன்ற செயல்பாடு குறித்து பேசக்கூடாது என்றுதான் விதி உள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.