ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இடிந்தகரை மீன் ருசிக்குமா? பேரவையில் சுவையான விவாதம்

இடிந்தகரை மீன்கள் ருசிக்குமா என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மிகச் சுவையான விவாதம் நடைபெற்றது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:46 pm

DIN


சென்னை: இடிந்தகரை மீன்கள் ருசிக்குமா என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மிகச் சுவையான விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில், இடிந்தகரையில் மீன்கள் பதப்படுத்த குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படுமா? என்று எம்எல்ஏ இன்பதுரை கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மீன்கள் பதனிடும் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது  என்று பதிலளித்தார்.

மேலும், இடிந்தகரை பகுதியில் மீன்கள் பதப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைக்கும் தனியார் நிறுவனத்தை அடையாளம் காட்டினால்  உடனே அமைக்கப்படும் என்றும் கூறினார்.

இதற்கு, இடிந்தகரை மீன்தான் மிக ருசியாக இருக்கும் என இன்பதுரை கூறியதால் பேரவையில் சுவாரஸ்யம் ஏற்பட்டது.

இதைக் கேட்ட சபாநாயகர் தனபால், ருசியான மீனென்றால் இடிந்தகரை மீனை எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

உடனே எழுந்து நின்ற அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை மானியக் கோரிக்கை அன்று அனைத்து உறுப்பினர்களுக்கும் இடிந்தகரை மீன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.