மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மோடி குறித்து தவறாகப் பேசியதற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஹெச்.ராஜா

மோடி குறித்து திருமாவளவன் தவறாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.

News image
Updated On :20 ஜூன் 2017, 4:46 am

DIN

கரூர்: மோடி குறித்து திருமாவளவன் தவறாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.

கரூரில் ஆண்டாங்கோவில் பகுதியில் பிஎஸ்என்எல் சார்பில் நடைபெற்ற மோடி அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மோடியைத் தரக் குறைவாக விமர்சித்து திருமாவளவன் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. கேரளம், மேற்குவங்கம் உள்பட 7 மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் பசுவதைச் சட்டம் உள்ளது. விவசாயிகளுக்குள் கால்நடைகளை விற்கத் தடையில்லை.

ஆனால், சந்தையில் விற்க உரிமம் வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே இச்சட்டம் அமலாகியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு முதலில் இடம் தேர்வு செய்து ஒப்படைக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.