6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேடு: தமிழக அரசு ஒப்புதல்! 

தமிழகம் முழுவதும் மருத்துமனைகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக... 

News image
Updated On :21 ஜூன் 2017, 10:48 am

DIN

மதுரை: தமிழகம் முழுவதும் மருத்துமனைகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், இதனை கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தாலும், அவை எதுவும் செயல்பாட்டிலில்லையென்றும் ரமேஷ் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும் அரசின் உத்தரவின்படி நடத்த வேண்டிய மருத்துவ முகாம்கள் கூட சரியாக நடத்தபடுவது இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

தமிழகம் முழுவதும் மருத்துமனைகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றன. இது தொடர்பாக நடந்த விசாரணையில் 16 மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 117 மருத்துவமனைகளுக்கு அவற்றின் செயல்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஏற்கனவே கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு  வருகின்றன.

இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.