கதிராமங்கலம் எண்ணெய் கிணறு விவகாரம்: ஓ.என்.ஜி.சி புது விளக்கம்!

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் எரிவாயு குழாய் பாதிப்பு மற்றும் எண்ணெய் கிணறு விவகாரத்தில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் புதிய விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கதிராமங்கலம் எண்ணெய் கிணறு விவகாரம்: ஓ.என்.ஜி.சி புது விளக்கம்!
Published on
Updated on
1 min read

சென்னை: தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் எரிவாயு குழாய் பாதிப்பு மற்றும் எண்ணெய் கிணறு விவகாரத்தில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் புதிய விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கிராமம் கதிராமங்கலம். இங்கு ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின்  எரிவாயு-எண்ணெய் கிணறுகளின் சீரமைப்பு மற்றும் புதிய எரிவாயு குழாய்களை பதிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக அதிநவீன ராட்சத இயந்திரங்களை தற்பொழுது அந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

இதனால் அச்சமடைந்த இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும்  இதற்கு ஏதிர்ப்பு  தெரிவித்து போராட்டங்களில் இறங்கினர். ஏற்கனவே இங்கு செயல்பட்டுவரும் எரிவாயு-எண்ணெய் கிணறுகளால் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது நடக்கும் நடவடிக்கைகள் இங்கு மீத்தேன் எடுக்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பதாகவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இந்திலையில் ஜூன் 2-ம்தேதி கதிராமங்கலத்தில் ஆயிரத்திற்கு அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, ஊரே ஒரு போர்க்களம் போல காணப்படுகிறது. சமூக வலைதளங்கள் மற்றும் ஊடங்களிலும் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் புதிய விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்பொழுது கதிராமங்கலத்தில் நடைபெற்று வருவது எரிவாயு-எண்ணெய் கிணறுகளின் பராமரிப்பு பணிகள் மட்டுமே ஆகும். இது தொடர்பாக மக்களின் போராட்டம் தேவையில்லாத ஒன்றாகும். உற்பத்தி ஆய்வு தொடர்பான பணிகள் மட்டும்தான் நடைபெறுகின்றன. மக்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் இப்பணிகள் உண்டாக்காது.

சமூக வலைதளங்களில் இது தொடர்பாக நடைபெறும் பிரச்சாரம் மற்றும் காட்டபப்டும் குறும்படங்கள் அனைத்தும் தவறானவை; ஆதாரமற்றவையும் கூட.இதன் மூலமாக சுற்றுச் சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com