ராம்நாத் கோவிந்துக்கு டிடிவி தினகரன் அணி ஆதரவு
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுகவின் டிடிவி தினகரன் அணி தனது ஆதரவை இன்று தெரிவித்துள்ளது.


சென்னை: பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுகவின் டிடிவி தினகரன் அணி தனது ஆதரவை இன்று தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறது அதிமுக 3 அணிகளாக பிரந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சசிகலா ஆதரவுடன் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல் பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வரும் அணியும் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக துணைபொதுச்செயலாளராக உள்ள டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது ஆதரவு என்பதை தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இதுகுறித்து இரு தினங்களாக தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில், பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு, டிடிவி தினகரன் தனது மற்றும் தனது ஆதரவாளர்களின் ஆதரவை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆதரவு அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா உத்தரவின்பேரில் ஆதரவு தெரிவிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...