நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டத்தில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருதல் தொடர்பான சட்ட உருவாக்க விவகாரத்தில் எந்த சிக்கலும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...


புதுதில்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருதல் தொடர்பான சட்ட உருவாக்க விவகாரத்தில் எந்த சிக்கலும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தில்லியில் தெரிவித்தார்.
மத்திய அரசு நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் தொழிற் கல்விக்கு சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த 'நீட்' எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்துகிறது. தமிழகத்தில் அதிக அளவில் மருத்துவ கல்விக்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த நுழைவுத்தேர்வை கிராமப்புற மாணவர்கள் எழுதுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு நீட் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
சமீபத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் தமிழக சட்டசபையில் சமீபத்தில் சட்டம் கொண்டு வந்து அனைத்துக்கட்சி ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் ஆகியோர் டெல்லி சென்றனர். இன்று காலை அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்துப் பேசினார்கள். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான தமிழக அரசு சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்பு ஜனாதிபதியின் ஒப்பு தலை பெறவும் வலியுறுத் தினார்கள்.
இந்த சந்திப்புக்குப்பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருதல் தொடர்பான சட்ட உருவாக்க விவகாரத்தில் எந்த சிக்கலும் இல்லை, விரைவில் இந்த சட்ட திருத்திற்கு ஒப்புதல் பெறுவோம். எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்' என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி. நட்டாவையும் தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...