சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணி சார்பாக முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக அக்கட்சியின் துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், திமுக சார்பாக மருது கணேஷ் என்பவரும் போட்டியிட உள்ளனர். எம்.ஜி.ஆர்-அம்மா -தீபா பேரவை சார்பாக அதன் தலைவர் தீபா போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணி சார்பாக யார் போட்டியிடுவார் என்பதை தீர்மானிக்கும் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்,செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தின் முடிவில் வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அதிருப்தி அணி சார்பாக அந்த அணியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் போட்டியிடுவார் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



